முக்கிய செய்திகள்

அடி வயிற்று சதையை குறைக்க வேண்டுமா ;

February 22, 2019

பொதுவாக  பெண்ணாக இருந்தாலும் சரி  ஆண் என்றாலும் சரி  மிக  பெரிய  அளவில்  தொந்தரவாகவும் , பல பேருடைய  கேலி  கிண்டலுக்கும் ஆளாகுவது   வீண்  அடிவயிற்று  சதையாக தான் இருக்கும்.

உடனடியாக  தீர்வும்  தர வேண்டும்   என்பதற்காக  பணம்  வீணாகுவதோடு  மட்டுமல்லாமல்,  தேவையில்லாத   தொந்தரவுகளை  சந்திக்கின்றனர்.  நோகாமல் நொங்கு  கும்பிடமுடியாது  என்று  பழமொழிக்கு  ஏற்றவாறு  நாம்   சிறுது  கடுமையான  முற்சிகளை  செய்வதில்   எந்த ஒரு  தவறுமில்லை . அந்த வகையில்  நம் அழகை  கெடுக்கும்  வகையிலும் உடலுக்கு   எந்த ஒரு பாதிப்பும்  தராத வகையில்   பின்பற்றக்கூடிய வழிமுறையை   தெரிந்து கொள்ளலாம் .

உடற்பயிற்சி, யோகா செய்வது  நம் உடலுக்கு  நல்லது  தருவதோடு  மட்டுமல்லாமல்  நம்  மனதிற்கும்  நிம்மதி தருகிறது. தினமும்  உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள், வீட்டிலிருந்த யோகா  பயிற்சி மேற்கொள்ளலாம் . இது  நமது  உடல் மேனியை  கட்டுடல்  கலையாமல்  இருக்கும் .

உணவு முறைகளை  கடைபிடிக்கும்  வழிமுறைகள்  :

எலுமிச்சை பழச்சாற்றுடன்    சிறிது  தேன்  கலந்து  பருகலாம். இது நமது  அடி வயிறு சதையை  குறைப்பதோடு   மட்டுமலலாமல்,  உடலின் இதர சதைகளையும்  குறைக்கும். பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத  கரு காப்பியை  குடிக்கலாம். காபி  குடிக்க  பழக்கமில்லாதவர்கள்   இளநீர்  குடிக்கலாம் .  ஆனால் அதனுள் இருக்கும்  தேங்காய்  உண்ண வேண்டாம் .  நாம் முடிந்த வரை  தேங்காயை   பயன்படுத்தாமல்  இருப்பது  நல்லது  . சட்னயில் கூட தேங்காய்   சேர்ப்பதர்க்கு பதிலாக  வெங்காயத்தை சேர்த்து   கொள்ளலாம் .

உணவில் சேர்த்து  கொள்ளகூடிய  விஷயங்கள் :

பப்பாளி காயை கூட்டு  சேர்த்து  சமைக்கலாம்  அல்லது   பப்பாளி  வைத்து  சாம்பார் செய்து  சாப்பிடலாம். பப்பாளியை  போன்று  முள்ளங்கியை  சேர்த்து கொள்ளலாம். நீர்முள்,நெருஞ்சி முள், கொத்தமல்லி, சோம்பு  எல்லவற்றையும்  சம அளவு   எடுத்து  அதை தூள்  செய்து  டீயில் , தேயிலைக்கு  பதில்  சேர்த்து பருகலாம்.

இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறைய :

ஆமணக்கு  வேரை  நன்றாக  இடித்து  தேன்  கலந்து  பிசைந்து  சிறிது  தண்ணீர்  ஊற்றி   இரவு  முழுவதும்   ஊறவைத்து மறுநாள் நீரை   வடிகட்டி  தினமும்   அரை டம்ளர்   குடித்து வர இடுப்பு பக்கம்  அதிகரித்த  சதை குறையும் .

உடல் எடை குறைய ,இடுப்பு வலி நீங்க :

பிரண்டை  துண்டுகளை ஒடித்து வந்து  ,அதன் தோலை  சீவி சிறு சிறு  துண்டுகளை வேக வைத்து, அதனை காய வைத்து   பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன்   ஒரு  தேக்கரண்டி  உப்பு, ஐந்து எலுமிச்சை   பழச்சாறு   சேர்த்து  மறுபடியும்  உயர்த்தி  எடுத்து கொள்ளவேண்டும். தினசரி  இதில்   அரை தேக்கரண்டி   பொடியை உணவுடனோ, உணவுக்கு   முன்பு  தண்ணீரிலோ   கலந்து   சாப்பிட  உடல் எடை குறைவதோடு  மட்டுமல்லாமல் , பெண்களுக்கு  ஏற்படும்  பின்  இடுப்பு    வலியும் சரி ஆகும் . மேற்குறிப்பிட்ட எந்த  மருந்துக்கும்  பத்தியம் கிடையாது .அதனால்  பக்க விளைவுகளும்  கிடையாது.

 

Top