இந்தியா பாகிஸ்தான் டிக்கெட் 48 மணி நேரத்தில் காலி

May 6, 2019

மே மாத இறுதியில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான டிக்கெட் 48 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளது‌. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் தொடர்கள் நடத்தப்படவில்லை. இருந்தாலும் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வந்தன. இந்நிலையில் வெகுநாட்களுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் பலபரீட்சை நடத்துவதால் கூட்டம் அலைமோதும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

Top