முக்கிய செய்திகள்

இனிப்பு அவல்

March 5, 2019

மாலை நேரங்களில் நொறுக்குத் தீனிகள் என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சத்தான எளிய முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் இனிப்பு அவல் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

அவல்                                                : 200 கிராம்

முந்திரி பருப்பு                  : 50 கிராம்

வேர்கடலை                                    : 50 கிராம்

சர்க்கரை                             : 300 கிராம்

தேங்காய்                            : 1 மூடி

உடைத்தக் கடலை           : 50 கிராம்

நெய்                                      : ¼ கப்

ஏலக்காய்                            : 4

சமையல்  எண்ணெய்     : 50 கிராம்

தேவையான பொருட்கள்:

ஒரு வாணலியில் நெய்யை விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய் கொப்பரை, முந்திரி பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். வாணலியை இறக்கும் தருவாயில் அதில் உடைத்தக் கடலையையும் போட்டு ஒருமுறை மட்டுமே புரட்டி எடுக்கவும்.

மீண்டும் வாணலியை சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு அவலை நன்கு பொரித்து எண்ணெய் வடிய எடுத்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து அத்துடன் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் கம்பி பதம் வரும் அளவு பாகு தயாரிக்கவும். அதில் பொடித்த ஏலக்காய் அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறவும்.

Top