உங்கள் மார்பங்களை பாதுகாக்க சில டிப்ஸ் ;

February 22, 2019

எப்போதும்  இறுக்கமாக பிரா அணியாதீர்கள் .உடற் பயிற்சியின் போது  தளர்வான  அளவில்   ‘பிராக்களை ‘ அணியுங்கள் .பிராக்களை கைகளால்   துவையுங்கள்  .வாஷிங்  மெஷின்  அடித்து  துவைத்தால்  அவற்றின் உருவம்  ,அமைப்பு மாறிவிடும் .

 

கர்ப்பகாலத்தில் அடிப்பாகத்தில்   இழை வைத்து தைக்கப்பட்ட பிராக்களை தவிருங்கள். ஸ்பெஷல்  ஆக  வடிவமைக்கப்பட்ட வசதியான, தாங்கக்கூடிய , பொருந்தக்கூடிய  அளவில்  பிராக்களை வாங்குங்கள்.

பெரிய மார்பகங்களை  உடையவர்கள் நன்கு தூக்கி  நிறுத்தக்கூடிய  பிராக்களை  அணியுங்கள். 80  சதவீத   பெண்கள் – சரியான  அளவில்லாத  பிரா அணிவதால்  தோள்பட்டை  ,முதுகுவலியால்  அவதியுறுகின்றனர்.

ஒரு நாளைக்கு   12  மணி நேரத்துக்கு  மேல் தொடர்ந்து ‘பிரா’ அணியாதீர்கள். பிராவின் அளவை சிறியதாக   அணிந்து அதன் மூலம்  மார்பகங்களை   சிறிய  அளவாக்காதீர்கள் .

இதற்கு பதிலாக -மினி மைலார் பிரா  அணியலாம்  .மார்பகங்களின்  அளவு ஒரு செ.மீ  வரை  சுருங்கி  டிஜிஓற்றமளிக்க செய்யும் . சிறிய மார்பகங்களை   உடையவர்கள்  சாதாரணமாக  அல்லது பெரியதாக   தோற்றமளிக்க   செய்ய  அடியில்  துணிவைத்து  தைக்கப்பட்ட பாடெட் பிரா  அணியுங்கள் .

எப்போதாவது  தான் ‘நாடா’ இல்லாத பிராக்களை  அணிய வேண்டும். கண்ணனுக்கு தெரியக்கூடிய  விதம்  ‘பிரா லைன்’ அமையாமல்  கவனமாக  பார்த்து கொள்ளுங்கள் .

உதாரணமாக  வெள்ளை  ரவிக்கையின்  கீழ் வெள்ளை நிற  பிராவை  அணியாதீர்கள். உடற்பயிற்சி  மூலம்  மார்பகங்கள்  தோற்றம் வடிவாவதுடன் மார்பக  புற்றுநோயிலிருந்து   பாதுகாத்து  கொள்ளலாம் .

Top