முக்கிய செய்திகள்

கரும்புள்ளிகள் நீங்க சூப்பர் டிப்ஸ் ;

February 22, 2019

பெண்களுக்கு  தங்களது  அழகை கெடுக்கும்  வகையில்   அமைவதில்  முக்கிமான ஒன்றாக  இருப்பது  கரும்புள்ளி பிரச்சனை தான். இவை நமது  உடலில்  ஏற்படும் ஜீன் மாற்றத்தினாலோ   அல்லது சத்து குறைபாட்டினால்  ஏற்படுகின்றன.   எண்ணெய் பிசுக்கள்   அதிகமாக    இருப்பதால்   பருக்கள்  உண்டாகின்றன  ,நாளடைவிலே  அவை   கரும்புள்ளிக்காக    மாறிவிடுகின்றன.  இந்த   கரும்புள்ளியை  விரைவில்  போக  சூப்பரான   டிப்ஸை   பார்க்கலாம்.

ரோஜா  இதழ்களுடன்   பாதாம் பருப்பை  ஊற வைத்து  அரைத்து  முகத்தில்  தடவி வர வேண்டும் . அப்படி முடியா  இயலாதவர்கள்  பப்பாளி பழம்  சிறிது  தேன் கலந்து  குழைத்து  முகத்த்தில்  தடவி வரலாம் .  பப்பாளி பழம்  இல்லையென்றால்  வாழைப்பழம்   அரைத்து முகத்தில் பூசி  கொள்ளலாம் .

வெள்ளரி சாறு, புதினா சாறு, எலுமிச்சை  பழச்சாறு  ஆகியவைகளை   சம அளவில்  கலந்து  முகத்திலுள்ள  கரும்புள்ளிகள் மீது  தேய்த்து  வந்தால் கரும்புள்ளிகள்  போய்விடும் .

உருளைக்கிழங்கை  இரண்டாக   வெட்டி  கரும்புள்ளிகள் மீது  தடவி வர அவை  மறைந்து விடும். ஜாதிக்காயை  அரைத்துப் போட்டால்  கரும்புள்ளி  நீங்கும் .

முகத்தில்  வெண்ணை  தடவி  எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரால்  ஆவி பிடித்து   துண்டால்   முகத்தை அழுத்தி துடையுங்கள். தொடர்ந்து   இப்படி செய்துவர  கரும்புள்ளி மறையும்.

வெள்ளரி சாறு, போரிக் பவுடர் தலை 1  டீஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகளில் தடவி 5 நிமிடம் ஊறவிடவும். பிறகு லேசாக  மசாஜ்  செய்து துடைத்தாள் உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும் .

கோதுமை, தவிடு, பால்  இரண்டும் தலா ஒரு  டேபிள் ஸ்பூன்  கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில  தடவி  வர வேண்டும். கொஞ்ச  நாட்களில்  கரும்புள்ளிகள் வலுவிழந்து  உதிர்ந்து  விடும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Top