முக்கிய செய்திகள்

கோதுமை மாவு ,ரவா மாவு டிப்ஸ்

March 1, 2019

கோதுமை மாவு ,ரவா மாவு  டிப்ஸ்;

 

பொதுவாக  நாம்  சப்பாத்தி , முறுக்கு , ரொட்டி  போன்றவற்றை செய்யவதற்காக  நம் முன்னாடியே  மாவு  அரைத்து வைப்போம் . சில சமயங்களில் நாம் தேவைக்கேற்றபடி  அதிக மாவு அரைத்து நாம்  இருப்பில் வைத்து கொள்வோம்.  ஆனால் சில சமயங்களில்   மாவு அதிக   நாள் வைத்திருந்தால்  வண்டு  மற்றும்  பூச்சிகள்   சேரும். அப்படி வராமல் இருக்க உதவும்  வகையில்  டிப்ஸை   பார்க்கலாம் .

கோதுமை மாவில் வண்டு   பிடிக்காமல்  இருக்க ?

சப்பாத்தி மாவை  நீண்ட நாட்களாக ஆகினால்   அவற்றால் வண்டு பிடிக்கும்  அதை  தடுக்க  இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தலாம்  .

கோதுமை  மாவுடன் சிறிதளவு உப்பை சேர்த்தால்     கலந்து வைத்தால்  போதும் ,அது எவ்வளவு  நாட்கள்  ஆனாலும்  வண்டு பிடிக்காமல் அப்டியே இருக்கும்.

கோதுமை மாவு கையில் ஒட்டாமல் இருக்க  ?

பொதுவாக   நாம்  கோதுமை மாவு பிசையும்  போது  நம் கையில் மாவு ஒட்டி கொள்ளும்  ., ஆனால்  மாவு ஒட்டாமல் இருப்பதை  தவிர்க்க   இதை செய்தாலே போதும் ,நாம் சப்பாத்தி  மாவை  நாம் தேய்க்கும் போது அதில்  சிறிதளவு  உப்பு சேர்த்து கொண்டால்  கையில் மாவு  ஒட்டவே ஒட்டாது  .

ரவா மைதாவில்    வண்டு  பிடிக்காமல் இருக்க  ?

ரவா  , மைதா  போன்றவை நாளடைவில்     அதில் வண்டு பிடித்துவிடும்  . அதை போக்க   ரவா , மைதா வைத்துள்ள பாத்திரத்தின் மீது வசம்பு வைத்தால் வண்டு  பிடிக்காமல்   இருக்கும்.

 

 

Top