நாம் சருமத்தை பராமரிப்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்ல ரிசல்டை கொடுக்கும்.
நாம் உண்ணும் உணவிற்கும் அழகுக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்று கேட்டால் ஆம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் நாம் உண்ணும் உணவின் பழங்களையும் நீர்ச்சத்து அதிகமாக எடுத்தால் நமது முகப்பொலிவு தோற்றம் தருவதோடு மட்டுமல்லாமல் நீண்டகால அழகும் இளமையும் குறையாமல் இருக்கும்.
சிலர் தங்கள் அழகைக் கூட்ட டயட் உணவுவகைகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதை துரிதமாக சரியான விகிதத்தில் செய்யும் நம்மில் சிலர் காலப்போக்கில் அதை சரியான விகிதத்தில் செய்வதே இல்லை.
முறையான டயட் சாட்டை உங்களுக்காக தயார் செய்திருக்கிறோம். தவறாமல் பயன்படுத்தினால் சிறப்பான பலன்களை அடைய முடியும்.
காலையில் எழுந்தவுடன் எலுமிச்சைப் பழச்சாற்றை சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து அந்தச் சாற்றை சுமார் ஒரு டம்ளர் அளவில் தினசரி பருக வேண்டும்.
தோசை இட்லி போன்ற அரிசி வகையை சாப்பிடுவதை தவிர்த்து நல்ல பழவகைகளை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து அதிகாலை உணவாக கடைபிடிக்கலாம். அதோடு புத்துணர்ச்சி மற்றும் அழகு கூடும் வகையில் ஒரு டம்ளர் கேரட் பழச்சாற்றை சேர்த்து சாப்பிடலாம்,
இடைவேளை உணவு:
காலை மற்றும் மதிய இடைவேளைகளில் வேகவைத்த காய்கறிகள் நன்கு முளைவிட்ட பயிறு, சிறிய கப் தயிறு சாலட் போன்றவற்றை நொறுக்குத் தீனிகளுக்காக எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
மதிய உணவு நேரத்தில் நன்கு வெண்ணெய் எடுத்த மோர் சுமார் ஒரு டம்ளர் பருக வேண்டும்.
மோர் அருந்திய இரண்டு மணிநேர இடைவெளியில் பழரசம் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.
மாலை நேரப்பொழுதில் காலையில் அருந்திய ஒரு டம்ளர் கேரட் பழச்சாற்றைப் பருகலாம்.
இரவு நேர உணவாக இரண்டு சப்பாத்தி புரோட்டீன் தரும் வகையில் வெண்ணெய் இல்லாத சப்பாத்தி பழங்கள் தயிர் அதனுடன் சாலட் சேர்த்து சாப்பிடலாம்.
பார்லருக்குச் சென்று பணத்தை வீணக்காமல் பாதத்தை பராமரிக்க எளிய வழிகள்:
நமது உடலில் அதிக அளவு பராமரிக்க வேண்டிய இடங்களில் மிகமுக்கியமானது பாதங்கள். மயில் எவ்வளவு அழகாக இருந்தாலும் அதன் கால்கள் அழகாக இருக்காது. அதுபோல நமது பாத அழகை பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அழகை பராமரிப்பதற்காக Pedicure என்ற முறையில் பார்லருக்குச் சென்று பணத்தை வீணாக்காமல் நமது பாதங்களை பராமரிக்கும் வழியைப் பார்க்கலாம்.
எளிய வழி பராமரிப்பு வழிகள்:
கால் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் தான் எந்த ஒரு பிரச்சினை அதாவது புண், அலர்ஜி போன்றவை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
பலபேர் செய்யும் தவறு குளிக்கும்போது சரியாக காலை சுத்தமாக வைத்திருக்காததுதான். அந்த வகையில் குளிக்கும்போது குறைந்தது 3-4 முதல் சோப்பு போட்டு கழுவி சுத்தமான துணியை வைத்து துடையுங்கள்.
கால்களில் அளவுக்கு அதிகமாக இருக்கும் நகங்களை வெட்டி விடுங்கள். நகங்களை வெட்டுவதிலும் தனி அழகு இருக்கிறது. கட்டையும் நெட்டையுமாக வெட்டாமல் நகங்களை சீராக வெட்டுவது அழகை சீராக்கும்
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை லேசான சுடுநீரில் சோப்பு கலக்கி அதில் கால்களை அமிழ்த்திவைத்துப் பாருங்கள். கால் பாதம் மிருதுவாகுவதோடு மட்டுமில்லாமல் அழகும் அதிகமாகும்.
மேலும் குதிகாலை தேய்த்து சுத்தப்படுத்தினால் நமது பாதங்களின் அழகும் ஆரோக்கியமும் பாதுகாக்கலாம். நமது காலின் நெருங்கிய நண்பரான தரமான செருப்புகளை அணிவதும் முக்கியமான விஷயமாகும்.
பித்த வெடிப்பு நீங்க:
கால் பாதங்களின் பித்தவெடிப்பை அகற்ற வெந்நீரில் சிறிதளவு சாம்பை கலந்து அரைமணிநேரம் காலை அதில் ஊற வைத்து காலில் தேய்த்தால் ஒரு மாதத்தில் வெடிப்புகள் மறைந்துவிடும். பாதங்களில் வாஸ்லின் கிரீம்கள் பிராபின் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவற்றை அவரவர் பித்தவெடிப்புத் தன்மைக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.
இரவு நேரங்களில் தேங்காய் எண்ணெய்த் தடவலாம். நகங்களில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க ஆலிவ் ஆயில் தடவ வேண்டும். இது நம் உடம்பிற்கு வைட்டமின் சத்துக்களும் தரும்.