முக்கிய செய்திகள்

சீஸ் கார்ன் பால்ஸ்

March 4, 2019

சீஸ் கார்ன் பால்ஸ் ;

தேவையானவை ;

உருளை கிழங்கு -100 கி
சீஸ் துருவியது – 100 கி
ஸ்வீட் கார்ன் – 50 கி
பச்சை மிளகாய் – 4
சோளமாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ருசிக்கேற்ப

Cheese Corn Balls
செய்முறை ;

ஒரு பாத்திரத்தில் ஸ்வீட் கார்ன், மசித்த உருளை கிழங்கு, சீஸ் துருவியது ஆகியவைகளை சேர்க்கவும். பின்னர் அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும் .

பின்னர் கலக்கிய இந்த கலவையை நன்றாக உருண்டை வடிவில் பிடித்து கொள்ளவும்.
பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடாக்கி கொள்ளவும். பின்னர் உருட்டி வைத்த அந்த உருண்டையை சோள மாவு கலவையுடன் பிரட்டி எண்ணெயில் தங்க நிறம் வரும் வரை பொரிக்கவும். பின்னர் தயாரான சீஸ் கார்ன் பால்ஸை சூடாக பரிமாறவும் .

Top