முக்கிய செய்திகள்

தக்காளித் தொக்கு

March 5, 2019

சொந்த ஊரைவிட்டு வேலைக்காக வெளியூருக்கு புறப்படும் இளைஞர்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை உணவு. சிலருக்கு ஹாஸ்டல் உணவுகள் சேரும். சிலருக்கு ஹாஸ்டல் உணவுகள் சேராது. எனவே தனியாக அறை எடுத்து தங்குவோருக்கு சமையல் கற்றுக்கொள்வது தேவையானதாக இருக்கிறது.  மிகச் சுலபமாக மிகக் குறைவான காய்கறிகளைக் கொண்டு தயாரிக்க முடியும். எனவே தான் பேச்சிலர்ஸ்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பது தக்காளித் தொக்கு.

தேவையான பொருட்கள்:

தக்காளி                               – 1 கிலோ
மிளகாய்த் தூள்                 – 100 கிராம்

வெந்தயம்                           – 4 டீஸ்பூன்

கடுகு                                     – 6 ஸ்பூன்

மிளகு                                    – 2 ஸ்பூன்

சீரகம்                                    – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள்                       – 2 ஸ்பூன்

நல்லெண்ணெய்               – ¼ கிலோ

உப்பு                                     – தேவைக்கேற்ப

செய்முறை:

தக்காளியை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சள் தூள் கலந்து பிசிறி தனியே எடுத்து வைக்கவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெயை ஊற்றி கடுகை வெடிக்கவிட்டு பிறகு பிசிறி வைத்த தக்காளிக் கலவையை எண்ணெயில் இட்டு வதக்கவும். சிறிதளவு வெல்லத்தை சேர்க்கவும்.

இத்துடன் தேவைப்படுவோர் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். இத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து தூள் வாசனை போனவுடன் இறக்கிவிட வேண்டும்.

Top