தனியாச் சட்னி :
இட்லி தோசை மாவுகள் கடைகளில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மல்லி – 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பெருங்காயப் பொடி – ¼ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – ¼ கரண்டி
புளி – சிறிய கோலி குண்டு அளவு
சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை:
புளியை ஊற வைத்து கெட்டியாக சாறு எடுக்கவும். அத்துடன் தேவையான உப்பைச் சேர்க்கவும். தனியா மிளகாய், உளுத்தம் பருப்பு தனித் தனியாக சிவக்க வறுத்து எடுக்கவும். இவைகளை பொடித்துப் புளியுடன் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விட்டு மேற்கூறிய கலவையை சேர்த்து சுருள புரட்டி பெருங்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
பசியைத் தூண்டும் சட்னி இது. மேற்கூறிய பொருட்களை சற்று அதிக அளவில் வறுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது தேவையான அளவு எடுத்து கலந்து சட்னி தயாரித்துக் கொள்ளலாம்.