முக்கிய செய்திகள்

தாஜ்மஹாலின் அழகில் மயங்கினேன் …இந்த நாளை என்னால் மறக்க முடியாது…

September 17, 2019

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாஜ்ம்ஹால் முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடித்து முடித்துள்ள பாரிஸ் பாரிஸ் திரைப்படம் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருகிறார். அந்த வகையில் சமீபகாலம் தாஜ்மஹாலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

அந்த புகைப்படத்துடன் , தாஜ்மஹாலின் அழகு குறித்து பலர் என்னிடம் சொல்லி கேட்டிருக்கிறேன், ஆனால் நான் நேரில் சென்று பார்த்ததில்லை. இப்பொழுது தான் முதன் முறையாக தாஜ்மஹாலை பார்க்கிறேன். தாஜ்மஹாலின் அழகில் மயங்கினேன். இந்த நாளை என்னால் மறக்க முடியாது’ என்று பதிவிட்டுள்ளார் .

View this post on Instagram

#strikeapose

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Top