முக்கிய செய்திகள்

திடீர் சாண்ட்விச்

March 5, 2019

பேச்சிலர்சில் பலருக்கு சோம்பல் அதிகமாக இருக்கும். கடையில் வரிசையில் நின்று ஆர்டர் செய்து வாங்கி வருமளவுக்கு நேரமில்லாதவர்கள் வீட்டில் இருந்து சாண்ட்விச் செய்யக் கற்றுக் கொண்டால் இரண்டு நிமிடங்களில் எளிதாக தயாரிக்க வழி உள்ளது.

தேவையான பொருட்கள்

ரொட்டித் துண்டுகள்                   – 6

இட்லி மிளகாய்ப் பொடி             – 2 ஸ்பூன்

வறுத்த வேர்கடலை பொடி       – 2 ஸ்பூன்

நல்லெண்ணெய்                           – 2 ஸ்பூன்

செய்முறை:

இட்லி மிளகாய்ப் பொடி மற்றும் வறுத்த வேர்க்கடலைப் பொடியை எண்ணெய் விட்டு குழைவாக கலக்கவும். இரண்டுஇரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே ஜாம் போல தடவி தோசைக் கல்லில் வாட்டி எடுக்கவும். பொந்நிறமாக ஆனவுடன் எடுத்துக் கொள்ளவும்.

Top