முக்கிய செய்திகள்

தொலைபேசி அழைப்பில் முத்தலாக்,வரதட்சணை கேட்டு சௌதியில் உள்ள கணவன் விவாகரத்து…

August 13, 2019

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மனைவிக்கு, சவுதியில் உள்ள கணவன் தொலைபேசி மூலம் முத்தலாக் கூறியது, குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மோட்டார் சைக்கிள் வாங்கித் தர கோரி மனைவியிடம் கணவன் தொடர்ந்து வற்புறுத்தியுளார் ,அதன் பின்னர் வீட்டுக்கு வந்தவுடன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

Image result for முத்தலாக்

ஆனால், தனது கணவர் பல்வேறு வகையிலும் வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறும் அந்தப் பெண்ணுக்கு, குறுஞ்செய்தி மூலம், தொலைபேசி அழைப்பு மூலம் முத்தலாக் கூறியுள்ளார். இதனால், குழந்தைகளுடன் தந்தை வீட்டில் இருக்கும் அந்தப் பெண், நிலை குலைந்து போயுள்ளார்.

Top