முக்கிய செய்திகள்

பஞ்சாப்பில் உள்ள மிக சிறந்த இடங்கள்

February 26, 2019

பஞ்சாப்:

பஞ்ச ஆறுகள் சேர்ந்து ஒன்றாக கலக்கும் இடமாக மிக மிக வளமான பகுதிகளில் ஒன்றாக பஞ்சாப் நாடானது சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்களையும் பெரிதளவில் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பஞ்சாப் மாநிலம்  குறிப்பாக விவசாயத்திற்கு பெயர்போன மாநிலமாகும். இங்கு ஆரஞ்ச், மாதுளை, ஆப்பிள், அத்தி, மல்பெரி, பாதம்பால் போன்ற பழங்கள் இப்பகுதியில் அதிகம் விளைகின்றன.

பஞ்சாப்பில் புகழ்பெற்ற கோயில் ஆச்சர்ய அழகை ஏற்படுத்தும் வகையில் அரண்மனைகள் வரலாற்று நினைவிடங்கள் உள்ளதால் சுற்றுலாப்பயணிகளை பெரிதளவில் குவிந்து வருகின்றன.

பஞ்சாப்பில் செல்லக்கூடிய தளங்கள்:

பரித்கோட்

ஜலந்தர்

கபூர்தலா

லுதியனா

பதான்கோட்

பாடியாலா

மொஹாலி

பஞ்சாப்பில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமே சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்க காரணமாக அமைகிறது.

இங்குள்ள பரக்கர் கோட்டையை பார்த்தப் பின் சண்டிகர் ரயில் நிலையம் செல்லலாம், அங்கிருந்து அரை மணி நேர பயண தூரத்தில்  சண்டிகர் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.

மேலும் அங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்தேரா, டேராடூன், நர்கந்தா, ராஜாஜி தேசிய பூங்கா, ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கும் சென்று வரலாம்

பஞ்சாப்பிற்கு விமானத்தில் செல்வதே சிறந்தது. சென்னையிலிருந்து புறப்பட்டால் அமிர்தசரஸ் செல்ல குறைந்தது 5 ½ மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

ரயில் சேவையை விரும்புவர்களாக இருந்தால் சென்னையிலிருந்து சண்டிகருக்கு இடையிலான தூரம் 2515 கிலோமீட்டர் ஆகும். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இருக்கும்.

 

Top