முக்கிய செய்திகள்

முட்டை வேக வைக்கும் போது செய்ய வேண்டியவை

March 1, 2019

Related image

முட்டையை வைத்து  முட்டை பொடி மாஸ், முட்டை வறுவல், போன்ற பல உணவுகள் இருந்தாலும், வெறும் முட்டையை  வேக வைத்து சாப்பிட்டாலே அதில் உள்ள சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் கொழுப்புகளும்   ஏராளம், அமெரிக்காவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி  நிறுவனம்   ஒன்று  வெளியிட்ட அறிக்கையில்  முட்டையில்  உள்ள புரதங்களும், நார்ச்சத்துக்கள், மற்றும் கொழுப்பு சத்துக்களை   வைத்து  ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளிலிருந்து  விடுபட மருந்தாக  உள்ளன  எனவும்   குறிப்பிட்டுள்ளனர் .

இப்படிப்பட்ட  சிறப்பு பெற்ற முட்டையை எந்த ஒரு மசாலா கலவையின்றி    வேக வைத்து சாப்பிட்டு வந்தாலே போதும். நமக்கு  சத்துகள் ஏராளமாக கிடைக்கும் .

ஆனால் இந்த முட்டையை தண்ணீரில் வேக வைக்கும் போது  அது உடைந்து விடும் , மற்றும்  சில சமயங்களில் அதிகமாக வெந்து  குலைந்து விடும் .

இதை தடுக்க   உதவும் வகையில் இந்த டிப்ஸை பயன்படுத்தலாம். முட்டையை வேக வைக்கும் போது அந்த முட்டையுடன் சிறிதளவு வினிகர் துளியை சேர்த்தால் முட்டை உடையாமல்  இருப்பதோடு மட்டுமல்லாமல் , விரைவில் வெந்து விடும் .

 

Top