முக்கிய செய்திகள்

வெளிநாடுகளிருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

September 11, 2019

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் மடிக்கணினிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கடத்தல் தொடர்பான ரகசிய தகவலின் படி, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவரை மடக்கி சோதனையிட்ட போது, சுவிட்சர்லாந்தில் உள்ள வெல்காம்பி சுவிஸ்நிறுவனத்தின் பெயர் பதித்த 300 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசியாவில் இருந்து வந்த நூர் லினா பிந்தி அப்துல்லா என்ற பெண், தான் அணிந்திருந்த சானிட்டரி பேடில் மறைத்து வைத்திருந்த 582 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.இதேபோல் கோலாலம்பூரில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஹரூன் ரசீத், ரிஸ்வான் ஃபாசுல்ஹாக், ஆகியோர் கால்சட்டை பாக்கெட்டிலும், மலக்குடலிலும் மறைத்து வைத்திருந்த 669 கிராம் தங்கத்தைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து, பயன்படுத்தப்பட்ட 20 மடிக்கணினிகளையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு 61.6 லட்சம் ரூபாய் என்றும், மடிக்கணினிகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Top