முக்கிய செய்திகள்

திருச்சியில் 12 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது…

October 9, 2019

திருச்சி அருகே உய்யன்கொண்டான் கால்வாயில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை 12 அடி நீளமும், சுமார் 250 கிலோ எடையும் கொண்ட மக்கர் இனத்தைச் சேர்ந்ததாக கூறிய வனத்துறையினர்
தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், திருப்பராய்த்துறை பகுதியில் உய்யன்கொண்டான் வாய்க்காலில் கடந்த இரண்டு நாட்களாக முதலை ஒன்று உலாவுவதைப்பார்த்த அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

முதலையை பிடிக்கும் நிபுணத்துவம் பெற்றவர்களை சென்னையில் இருந்து வரவழைத்த வனத்துறை மற்றும்தீயணைப்புத்துறையினர், முதலை முகாமிட்டிருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு கால்வாய் ஓரமுள்ள புதரில் பதுங்கியிருந்த முதலையை நிபுணர் குழுவினர் பிடித்தனர்.

Top