முக்கிய செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…

October 31, 2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், ஒரே தேசம் என்ற சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவு நனவாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்த நாளை இன்று தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குஜராத்தில் பட்டேல் சிலை நிறுவப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு அனைத்து மாநில காவல்துறையின் ஒற்றுமையை விளக்கும் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி குஜராத்தின் கெவாடியா எனும் இடத்தில் நர்மதை ஆற்றின் நடுவே 597 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

Top