தமிழகத்தில் தற்பொழுது பருவமழை தீவிரமடைந்து வருகிறது.இந்நூலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,அவர் தெரிவித்திருப்பதாவது அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் 4ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறினார்.