2000 ஆண்டுகள் பழமை மாறாத அழகிய நம்பிராயர் கோவில்

March 12, 2019

திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர்,தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சின்ன ஊர் திருக்குறுங்குடி.

விவசாயத்தை நம்பி தான் இங்கு இருப்பவர்களோட வாழ்க்கை இருக்கிறது. ஊர சுத்தி நெல் வயலும், வாழைதோப்பும் தான் பிரதான பயிர்களாக இருந்து வருகிறது.கொடுமுடியாறு அணை, ஆறு, குளம், கால்வாய் என ஊரே பசுமையாய் காட்சி தருகிறது.

அழகிய நம்பிராயர் கோவில்

கோவில் முழுக்க கல்தூண்கள், கற்கள் கொண்டு எழுப்பப் பட்டதால், எவ்வளவு வெயில் அடித்தாலும் கோவில் உள்ளே குளுமையாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கிறது.

30 அடி உயர மதில்சுவர், தெப்பகுளம், கோவில் உள்ளே 20 அடி ஆழத்தில் நீர் ததும்பும் கிணறு என மிகப்பெரும் உள்கட்டமைப்பு வசதியோட கோவில் வடிமைக்கப்பட்டுள்ளது.

பண்டைய கால மக்களின் திறமை பண்பாடு, அறிவியல், உறவுமுறை, வாழ்வியல் என பல விஷயங்கள அந்த கோவில் சிற்பங்கள் பேசுகிறது.

சாமி சிலைகளை விட சாதாரண குடிமக்கள் சிற்பங்கள்தான் அதிகமாக இங்கு காணப்படுகிறது. குறவப்பெண், அரக்கன், முனிவர், போர்வீரன், பணிப்பெண் என சமகால மக்களை பிரதிபலிப்பதாக இங்கிருக்கிற சிலைகள் இருக்கிறது.

குதிரையின் மூக்கனாங்கயிறு, மனிதகால் நகம், கால்நரம்புகள், தலைமுடி என தத்ரூபமாய் சிலைகள் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு சிலைகளும் 7 அடி உயரத்தில் அதிசயிக்க வைக்கிறது. அந்நாளைய அணிகலன், ஆபரணம், கூடைகள் என வரலாறு சொல்லி செல்கிறது.

ஒவ்வொரு சிற்பத்தின் பிண்ணனியிலும் சில கதைகளும் பல விஞ்ஞான உண்மைகளும் ஒளிந்திருப்பதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.

கோவிலின் வயது 2000 ஆண்டு என்கிறார்கள், பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழனின் சிற்பக்கலையும், விஞ்ஞான அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

மன்னர்கள், அறிஞர்கள், ஞானி, சித்தர்கள் என பல ஆயிரம் தலைமுறையை பார்த்துக் கொண்டு இன்றும் நிற்கிறது. இதுமாதிரியான பழமை வாய்ந்தவை எல்லாம் நம் நாட்டின் ஒளிகுன்றா செல்வங்கள்.

Top