முக்கிய செய்திகள்

210 யூடுயூப் சேனல் முடங்கியது …

August 23, 2019

ஹாங்காங்கில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக சீனாவின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் 210 யூடுயூப் சேனல்களை கூகிள் முடக்கியுள்ளது.ரஷ்யா சமூகவலைதலங்கள் மூலம் பிற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுவது போல், சீனாவும் அதே பாணியை பின்பற்றுவதாக சமூகவலைத்தள ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன.

Image

ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளோடு ஒப்பிட்டும், இவர்கள் அனைவரும் சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல கேலியாக சித்தரித்தும் யாரோ பின்னணியில் இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை பேஸ்புக்கும், 2 லட்சம் கணக்குகளை ட்விட்டரும் முடக்கிவிட்டன.பாட்ஸ்கள் எனும் தானியங்கி கணக்குகளும் இதில் அடங்கும். அதே புகாரின் பேரில் தற்போது ஹாங்காங் போராட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்டது போல் கருத்து கூறி வந்த 210 யூடுயூப் சேனல்களை கூகிள் முடக்கியுள்ளது

Top