முக்கிய செய்திகள்

இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை

October 31, 2019

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இதே நாளன்று 1984 ஆம் வருடம் பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 35 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி , டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் அவரது மருமகளும், காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இதேபோன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Top