முக்கிய செய்திகள்

கல்கி சாமியாரிடம் நடைபெற்ற வருமான பரிசோதனை நிறைவு…90 கிலோ தங்கம் மற்றும் ரூ.44 கோடி பறிமுதல்…

October 21, 2019

கல்கி பகவான், அவரது மகன் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது.சென்னை, பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட நாற்பது இடங்களில் ஐந்து நாட்கள் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையின்போது, வையிட் லோட்டஸ் குழு தொடர்புடைய சோதனையில் ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல, கல்கி சாமியாரின் மகன் வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வருமானவரித்துறை ஐந்து நாள் சோதனை முடிவில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டி வருவாயாக வந்த ரூ.90 கோடி மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கி சாமியர் குடும்பம் வெளிநாடுகளில் சொத்துக் குவித்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top