முக்கிய செய்திகள்

மும்பையில் மின்சார ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து

October 9, 2019

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில், மின்சார ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ரயிலின் மேற்பகுதி பற்றி எரிந்தது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸிலிருந்து பன்வெல் நோக்கிச் சென்ற உள்ளூர் ரயில் ஒன்று, வாஷி ரயில் நிலையம் அருகேவந்தபோது ரயிலின் மேற்பகுதியில் திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. தீ மளமளவென பரவியதால் கரும்புகை சூழ்ந்தது.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ரயில் நடுவழியில் நின்றதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் தாமதமானது.

Top