முக்கிய செய்திகள்

ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை-நடிகை காயத்ரி ரகுராம்

September 16, 2019

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தாய்மொழிக்கும் தேசிய மொழிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர்,
இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தி பொது மொழியாக பேசப்பட்டு வருவதால் இந்திய மக்கள் இணைவதற்கு இந்தி வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பள்ளி செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது போல் எதிர்காலத்திற்கு நல்லது என்பதால் இந்தியை கட்டாயப்படுத்துவது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Top