முக்கிய செய்திகள்

சின்னத்திரை நடிகரான மனோ கார் விபத்தில் உயிரிழந்தார்…

October 29, 2019

நடிகரும் சின்னத்திரை தொகுப்பாளாருமான நடிகர் மனோ கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.மிமிக்கிரி மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் மனோ. புழல் படத்திலும் இவர் நடித்துள்ளார். தீபாவளி அன்று மனோ தனது மனைவி லிவியா உடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

சென்னை அம்பத்தூர் அருகே கார் சென்ற போது நிலை தடுமாறி சாலைத் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடைய மனைவி லிவியா விபத்தில் பலத்த காயமடைந்ததால் ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். நடிகர் மனோவின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Top