முக்கிய செய்திகள்

கனா படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து…

August 23, 2019

சமீபத்தில் தேசிய விருது வாங்குவதற்கான பட்டியல் வெளியானது .அந்த தேசிய விருது பட்டியலில் மக்கள் எதிர்பார்ப்பில் பெரிதளவில் வெற்றி பெற்ற தமிழ் படம் எதுவும் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image result for kanaa movie aishwarya rajesh

மக்கள் எதிர்பார்ப்பில் பெற்ற வெற்றி படங்கள் என்றால் அந்த பட வரிசையில் 96 ,கனா,பரியேறும் பெருமாள் போன்ற பல படங்கள் இந்த வரிசையில் அடங்கும் .அந்த வகையில் விளையாட்டை மையமாக கொண்டு வெளிவந்த கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் தேசிய விருது கனா படத்திருக்காக கிடைக்காதது குறித்து அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Image result for kanaa movie aishwarya rajesh

 

இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெய் படத்தில் மருந்து கம்பெனி பிரதிநிதியாக வருகிறேன். பெரிய இயக்குனர், புதுமுக இயக்குனர் என்று பாகுபாடு பார்க்காமல் நடிக்கிறேன். மெய் படத்தில் புதுமுகம் நிக்கி சுந்தரம் தான் கதாநாயகன் என்றும் தெரிவித்தார்.

Image result for kanaa movie aishwarya rajesh

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி எல்லோரும் வருத்தப்பட்டார்கள். எனக்கு வருத்தம் இல்லை. தேசிய விருது அறிவிப்பையே கவனிக்கவில்லை. கீர்த்தி சுரேஷ் தேசிய விருதுக்கு முழு தகுதி உடையவர் என்றும் தெரிவித்தார்.மெய் படத்தினை தொடர்ந்து க/பெ ரண சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் படங்களிலும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Top