முக்கிய செய்திகள்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித்-இணையத்தில் வைரல்

July 31, 2019

அஜித் திரைத்துறை மட்டுமின்றி கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் உலக அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.சமீபத்தில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அஜித் வருகையை அடுத்து போட்டி நடைபெறும் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Top