முக்கிய செய்திகள்

அஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிரபலம் ….

August 10, 2019

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஸ்வாசம் படம் போல படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பெண்களை மதிக்கும் விதமாகவும் சமூகத்தில் சம இடம் கொடுக்கும் விதமாகவும் படத்தில் நல்ல கருத்துக்களை அஜித் மக்கள் முன் எடுத்து வைக்கிறார்.

இப்படத்தை அடுத்து இதே தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத் உடன் அஜித் மீண்டும் இணைகிறார்.தல 60 என குறிப்பிடப்படும் இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 ல் இருந்து வெளியே வந்துள்ள ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது .

Top