முக்கிய செய்திகள்

மாமல்லபுரம் கடலில், இருநாடுகளின் போர்கப்பல்களின் கண்காணிப்பு பணி தீவிரம்

October 9, 2019

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, மாமல்லபுரம் கடலில், இருநாடுகளின் போர்க்கப்பல்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஒன்றாக நிகழ்ச்சிகளை பார்வையிட உள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, இரு நாட்டு கடற்படைகளின் 4 போர்க்கப்பல்கள் மாமல்லபுரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன

Top