முக்கிய செய்திகள்

பி.சி.சி.ஐ. தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பதவியேற்றார்…

October 23, 2019

பி.சி.சி.ஐ. தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பதவியேற்றுக் கொண்டார்.ஐ.பி.எல். சூதாட்டப்புகார்களைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள லோதா கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால் பரிந்துரைகளில் சிலவற்றை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது.

இதன் காரணமாக, பிசிசிஐ நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினோத் ராய் தலைமையில் பிசிசிஐயை நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டது. கடந்த 33 மாதங்களாக அந்தக் குழு, பிசிசிஐயை நிர்வகித்து வந்தது.

இந்த நிலையில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கூடி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆலோசனை நடத்தின. அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, பிசிசிஐ தலைவராக்குவதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Top