முக்கிய செய்திகள்

நயன்தாராவை புகழ்ந்த பாலிவுட் பிரபல நடிகை-வைரல் வீடியோ

October 22, 2019

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் கத்ரீனா . தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ள கத்ரீனா அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார்.கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கத்ரீனா உடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார்என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் கத்ரீனா, தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர். கனிவானவர். என்றென்றும் நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது கத்ரீனா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Presenting @kaybykatrina to all of you. It's truly a dream which has come into existence so beautifully. Thank you to my entire team, Nykaa, Falguni Nayar, Reena Chhabra and everyone for helping me achieve this..so much love to all of you from the bottom of my heart..❤ lastly..always remember, be authentic, be real, be yourself…because #ItsKayToBeYou. NOW OUT IN STORES AND NYKAA.COM (link in bio) @mynykaa #KayByKatrina #KayXNykaa #MakeupThatKares Thank u to all the beautiful women who collaborated with me on this … you are all truly Queens! @zoieakhtar @anaitashroffadajania @nehwalsaina @therajakumari @kushakapila @jannatzubair29 @urvashi_umrao @andreakevichusa @sanathampi @priyadarshini.96 @anugrahanatarajan @haima_simoes #Nayanthara #Appoorva #Simone

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

Top