முக்கிய செய்திகள்

மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…

October 31, 2019

பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கிறார்கள்.எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் பீகார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,பிரபல இந்தி நடிகரும், ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய்குமார் பீகார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.

Top