முக்கிய செய்திகள்

களைகட்ட தொடங்கிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்…

August 2, 2019

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் தீவிரமடைந்துள்ளது.எனினும் தற்போது காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், இந்தாண்டு ஆடிப்பெருக்கின் போது வழக்கமான உற்சாகம் காணப்படுமா என்பது சந்தேகமே.

காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப் பெருக்கு. விவசாயத்தை காக்கும் அன்னையாக காவிரித் தாய் விளங்குவதால் காவிரி அன்னையை போற்றும் வகையிலும், அன்றைய தினம் மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து புது மணத் தம்பதிகள் அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இந்த ஆடிப்பண்டிகை டெல்டா மாவட்டங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்படும்.காவிரி ஆற்றில் காப்பரிசி, காதோலை கருகமணி, பழங்கள் வைத்து தீப, தூப ஆராதனை காண்பித்து அதனை இலையில் வைத்து நீரில் விடுவது வழக்கம்.இதே போன்று சிறுவர்கள் பாத்திரங்களில் காவிரி நீரை எடுத்து சிறிய சப்பரத் தட்டிகளில் வைத்து உற்சாகமாக தங்கள் வீடுகளுக்கு காவிரி அன்னையை அழைத்துச் செல்வதாக எண்ணி எடுத்துச் செல்வார்கள்.

Top