முக்கிய செய்திகள்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

August 19, 2019

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Top