முக்கிய செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சற்றே குறைந்தது…

August 23, 2019

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை பல புதிய உச்சங்களையும் எட்டியது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 28 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 8 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Image result for gold price

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 100 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Top