முக்கிய செய்திகள்

திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்கள், ஒரு பேராசிரியருக்கு கொரோனா உறுதி

March 16, 2021

 

திருச்சி அருகே அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியை அடுத்த சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 286 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 15 மாணவர்களுக்கும், பேராசிரியர் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், பொறியியல் கல்லூரி மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Top