முக்கிய செய்திகள்

நடனம் ஆடிக்கொண்டே ராம்ப் வாக் செய்த தீபிகா…இணையத்தில் வைரல்

September 7, 2019

இந்திய பேஷன் வளர்ச்சி உலகம் முழுவதும் ஒலிக்கிறது எனில், அதில் முக்கிய பங்கு அபு ஜானிக்கும் சந்தீப் கோஸ்லாவிற்கும் உண்டு. இந்த துறையில் சாதித்த 33 வருடத்தை கொண்டாடும் விதமாக இருவரும் மும்பையில் ஃபேஷன் ஷோவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இருவரையும் கவுரவிக்க தீபிகா படுகோன் ஷோ ஸ்டாப்பராக மேடையை அலங்கரித்தார்.

ஷோவில் தீபிகா அணிந்து வந்த ஆடை அனைவரையும் மெய் மறக்கச் செய்தது. ஐவரி வேலைபாடுகள் ஜொலிஜொலிக்க லெஹங்கா முழுவதும் வேலைபாடுகளால் மிளிர்ந்தது. திருமணமாகப் போகும் பெண்களுக்கு தீபிகாவில் இந்த லெஹங்கா நிச்சயம் பொருத்தமானதாக இருக்கும்.

ஷோவில் தீபிகா அணிந்து வந்த ஆடை அனைவரையும் மெய் மறக்கச் செய்தது. ஐவரி வேலைபாடுகள் ஜொலிஜொலிக்க லெஹங்கா முழுவதும் வேலைபாடுகளால் மிளிர்ந்தது. திருமணமாகப் போகும் பெண்களுக்கு தீபிகாவில் இந்த லெஹங்கா நிச்சயம் பொருத்தமானதாக இருக்கும்.

ஆடைக்கு ஏற்ற மேக் ஃப் இல்லாமல் மிகவும் எளிமையான மேக் அப் அப்ளை செய்திருந்தார். அணிகலன்களுக்கும் முக்கியதுவம் அளிக்கவில்லை. முற்றிலும் ஆடையின் அழகை வெளிப்படுத்த மற்ற அலங்கார விஷயங்களில் கவனம் செலுத்தவில்லையோ என்ற கேள்வி தீபிகாவின் தோற்றத்தைப் பார்க்கும்போது எழுகிறது.

இருப்பினும் இவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டது தீபிகாவின் நடனம். ஆம், மேடையில் ஃபேஷன் டிசைனர்ஸ் அபு ஜானி, சந்தீப் கோஸ்லாவுடன் சேர்த்து நடந்து வந்த தீபிகா திடீரென ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்திலிருந்து ஒலித்த டிஸ்கோ தீவானே பாடலுக்கு நடனமாடத் தொடங்கிவிட்டார். பின் அரங்கமே அவருடைய நடனத்தால் உற்சாகம் கொண்டது. அவரோடு டிசைனர்களும் நடமாட அவர்களுடன் வந்த நடிகர் ஜயா பச்சன் மற்றும் அவருடைய மகள் ஷ்வேதாவும் நடனமாடினர்.

Top