முக்கிய செய்திகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி-டெல்டா விவசாயிகள்

August 13, 2019

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள டெல்டா விவசாயிகள், அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி சுற்றுவட்டாரத்தில் காவிரி நீரை நம்பி பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உற்சாகமடைந்துள்ள விவசாயிகள், விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும்போதே உப கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.காவிரி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே நாகை மாவட்ட விவசாயிகள் விவசாய நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். விதைப்பண்ணைகளில் விதைநெல் தொய்வின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Top