முக்கிய செய்திகள்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக இளைஞரணி செயலாளர்…

September 17, 2019

பேனர் விழுந்ததால் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பேனர் கலாச்சாரம் வேண்டாம் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திமுக வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். பேனர் தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சுப ஸ்ரீக்கு நிகழ்ந்ததுபோல இனி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Top