திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. அந்த பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது .இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்த்தியாக திருவிழா நடைபெற்று வரும் .இந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த 31 ம் தேதி திருவிழா தொடங்கி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி எனும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குறைகள் தீர்ந்ததுக்காக நேர்த்திக்கடனை செலுத்திவந்தனர் . சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆரவாரம் செய்து வழிபட்டனர் .
கொழுத்தும் வெயிலிலும் பக்தர்கள் அனல் பறக்கும் அக்னி குண்டத்தில் இறங்கியது அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் அவர்களது மனக்குறைகளையும் கஷ்டங்களையும் கடவுள் முன்வைத்து இறை அருள் பெற்று சென்றனர் .