முக்கிய செய்திகள்

கனடாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட சீனர்களின் டிராகன் திருவிழா

September 16, 2019

கனடாவின் டொரன்டோவில் சீனர்களின் டிராகன் திருவிழா வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.வசந்த காலத்தின் மத்தியில் கொண்டாடப்படும் டிராகன் திருவிழாவுடன் இந்த ஆண்டு சீனாவின் 70-வது நிறுவன தினமும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கனடாவில் உள்ள மிகப்பெரிய நகரான டொரன்டோவில் உள்ள சீன தூதரகத்தை அணுகிய சீனர்கள், விழாவைக் கொண்டாட அரசு மைதானத்தில் ஏற்பாடு செய்தனர்.3 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஐ லவ் சீனா என்ற தேசப்பற்றுப் பாடல் பாடப்பட்டது. இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கண்கவர் வண்ணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்களின் சாகசமும், 70 ஆண்டு கால சீனர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்பட்டன.மக்களை வெகுவாக கவரும் வகையில் வண்ண வண்ண டிராகன்களின் உருவ பொம்மைகளும் காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தின.

Top