முக்கிய செய்திகள்

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் மேஜிக் டயட் இது தானா…

August 26, 2019

பொறித்த கோழியும், சாக்லெட்களும் தனது மேஜிக் டயட் என ஆசஷ் தொடரில் இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில், விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், 219 பந்தில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் 142 ஆண்டுகால வரலாற்றில், மிகச்சிறந்த இன்னிங்ஸாக பென் ஸ்டோக்ஸின் இன்னிங்ஸ் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது டயட் ரகசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பென் ஸ்டோக்ஸ், முந்தைய நாள் இரவு சாப்பிட்ட பொறித்த கோழியும், இரு சாக்லெட் பார்களும்தான் மேஜிக் டயட் என்றார்.

அத்துடன் காலையில் அருந்திய காபியையும் அவர் இணைத்துக் கொண்டார். போட்டியில் தோற்றால் ஆசஷ் கோப்பை கிடைக்காது என்பதையும், இங்கிலாந்தின் வெற்றியை நிர்ணயிக்கும் பந்து என்தையும் உணர்ந்து செயல்பட்டதாகவும் பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Top