முக்கிய செய்திகள்

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு உபரி நீர் அதிகளவு வெளியேற்றம்…

August 12, 2019

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வரத்து தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவிற்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 .15 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒனேக்கல் நீர்வீழ்ச்சி, பிரதான அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் பரிசல்துறை முற்றிலுமாக மூழ்கியுள்ளது. மேலும் விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க, தர்மபுரியில் இருந்து ஒனேக்கல் வரும் சாலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அஞ்செட்டி வழியாக வரும் பிரதான சாலைகளில் தடுப்பு அமைத்து வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர, காவிரி கரையோர பகுதி மக்களை மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Top