முக்கிய செய்திகள்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

May 30, 2019

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள துலுக்கன்குறிச்சியில், ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட அறைகளும், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் உள்ள 71-வது அறையில், அம்மையார் பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் அணுகுண்டு பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதில், அறையில் இருந்த இரண்டு ஊழியர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர். வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல்கள், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top