முக்கிய செய்திகள்

சென்னை திருவெற்றியூர் குப்பம் பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம்…

September 11, 2019

சென்னை திருவெற்றியூர் குப்பம் பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரை மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவொற்றியூர் மீன்பிடி துறைமுக பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்றும் இதனால் மீன்வர்கள் வழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும், விரைவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வர இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Top