முக்கிய செய்திகள்

பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஷ்ரா மறைவையொட்டி மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு

August 19, 2019

பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜகன்நாத் மிஷ்ரா, உடல் நலக்குறைவால் காலமானார்.பீகார் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து, பின்னர் அரசியலில் காலடி எடுத்துவைத்த ஜகன்நாத் மிஷ்ரா, 1975, 1980 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் தொடங்கி மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். பதவிக் காலத்தில் இருந்தபோது மாட்டுத் தீவன ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் ஜகன்நாத் மிஷ்ராவிற்கு, 2013ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனிடையே, 82 வயதான ஜகன்நாத் மிஷ்ரா, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர் பிரிந்தது. ஜகன்நாத் மிஷ்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Top