முக்கிய செய்திகள்

படப்பிடிப்பு தளம் அமைக்க 1 கோடி ரூபாயை வழங்கிய அரசு…

September 16, 2019

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் . காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில், புதிதாக இந்த படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Top