முக்கிய செய்திகள்

சூறாவளி தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் சூழ்ந்த வீடுகள்

October 21, 2019

அமெரிக்காவின் டல்லாஸ் நகரை நேற்றிரவு சூறாவளி தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.டெக்சாஸ் மாநிலத்துக்கு உட்பட்ட டல்லாஸ் நகரில் நேற்றிரவு இடிமின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. சுழன்றடித்த சூறைக்காற்றில், மரங்கள், கட்டிடங்கள் இடிந்தது மட்டுமல்லாமல், வாகனங்களும் சேதமடைந்தன. நகரின் வடக்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தையும் சூறாவளி தாக்கியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சுமார் ஒரு லட்சம் வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன. மேலும் சில விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு, விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.அமெரிக்காவின் டல்லாஸ் நகரை நேற்றிரவு சூறாவளி தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.டெக்சாஸ் மாநிலத்துக்கு உட்பட்ட டல்லாஸ் நகரில் நேற்றிரவு இடிமின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. சுழன்றடித்த சூறைக்காற்றில், மரங்கள், கட்டிடங்கள் இடிந்தது மட்டுமல்லாமல், வாகனங்களும் சேதமடைந்தன. நகரின் வடக்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தையும் சூறாவளி தாக்கியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சுமார் ஒரு லட்சம் வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன. மேலும் சில விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு, விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

Top