முக்கிய செய்திகள்

இளையராஜா அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது புகார்…

October 3, 2019

சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா ஒலிப்பதிவு செய்யும் கூடத்தில் சிலர் அத்துமீறி நுழைந்ததாக அவரது உதவியாளர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.பிரசாத் ஸ்டியோவில் இசையமைப்பாளர் இளையராஜா இசை கோர்ப்பு செய்யும் கூடம் உள்ளது. ஸ்டூடியோ ஊழியர்கள் சிலர் அந்த கூடத்திற்கு வந்து கணிணி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தபால் மூலமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளர் கஃபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

Top